பூமியில் பாதி... சாமியில் பாதி...
வாழ்க்கையில் பாதி... ஜீவனில் பாதி...
என்றென்றும் பெண் தானே !
எவ்வளவு உண்மை!
பாடல்: புத்தம் புது மலர்கள் நாங்கள்
படம்: 1997-ல் வெளிவந்த காலமெல்லாம் காதல் வாழ்க (ஆமாங்க முரளி படம்தான்).
பாடியவர்: சித்ரா
இசை: தேவா
பெண்கள் வேலைக்குச் செல்லும் முன் இப்பாடலைக் கேட்டு விட்டுச் சென்று பாருங்கள்... நிச்சயம் தன்னம்பிக்கை பிறக்கும்... அவ்வளவு அழகாக சித்ரா positive note உடன் பாடியிருப்பார்...
சித்ரா மிக அழகாக பாடும் இடமும் மேலே சொன்ன வரிகள்தான். கேட்டுப்பாருங்கள். நிச்சயம் பிடிக்கும்.
பிடித்திருப்பின் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
இப்பாடலை மிக அரிதாகவே ஊடகங்களில் கேட்க முடிவது ஒரு சோகம். இப்பாடலும் காதலன் காதலியைப் பிரிந்து வருந்தும் ஒரு சோகப் பாடலே!
பாடகராக இளையராஜாவிடம் எனக்கு மிகவும் பிடித்தப் பாடல். அவர் பாடிய பல பாடல்கள் அருமையாக இருந்தாலும், இது எனக்கு மிகவும் நெருக்கமான பாடலாகவே இன்று வரை இருந்து வந்திருக்கிறது.
அது "என் அருகில் நீ இருந்தால்" என்ற திரைப்படத்தில் வரும் "நிலவே நீ வரவேண்டும்" என்ற, தனித்துப் பாடும் ஒரு பாடல்.
இப்பாடலில் Prelude என்று சொல்லப்படும், தொடக்க இசையை சற்று கண் மூடிக் கேட்டுப் பாருங்கள்.
செம்மிசை கிதாரின் துவக்கமும், அதன் ஊடாக வரும் "பேஸ்" கிதாரின் இசையும், நம்மை இன்பக் கடலில் மிதக்க வைக்கும்.
புல்லாங்குழலை அதிகம் பயன்படுத்தியவர் (பயன்படுத்துபவர்) இளையராஜா. இது மிகைப்படுத்தப்படாத உண்மை. இதை மறுப்பவர்கள் முதலாவது சரணத்திற்கு முன்பு வரும் இசையைக் கேட்டுப் பாருங்கள், புல்லாங்குழல், தபேலா மட்டும் பயன்படுத்தி அமைத்திருப்பார்.
இங்கே ஒரு வரியை முத்தாய்ப்பாக இளையராஜா மிக அழகாக அனுபவித்துப் பாடியிருப்பார்...
அது இரண்டாவது சரணத்தில் வரும்.... "கலைந்து பிரிந்த மேகங்கள், இழந்த காதல் சோகங்கள்" என்ற வரிகள்.
தமிழின் அழகே இந்த ல, ள, ழ எழுத்துக்கள் தானே? அதைத் தெளிவாகவும், ஒவ்வொரு வார்த்தையும் மற்றொன்றின் மீது உரசி விடாமல் மிக லாவகமாக கையாண்டிருப்பார். அவ்வரிகளை அவர் பாடும்போது பின்புறம் நின்று ஒலிக்கும் வயலின் இசையும் அருமை.
இரவில் கேட்க உகந்த பாடல். இப்பாடலைக் கேட்டு ரசிக்க இங்கே சொடுக்கவும்:
http://www.thiraipaadal.com/TPplayer.asp?sngs=%27SNGIRR0725%27
பிடித்திருப்பின் பின்னூட்டத்தில் பகிரவும்.
இரவு , இளையராஜா , நிலவு , பாடல் , புல்லாங்குழல்
நம் ஊனோடும் உயிரோடும் இரண்டற கலந்திருக்கும் நல்ல திரைப்பாடல்களை உங்களில் ஒருவனாக இருந்து அலசலாம் என்றிருக்கிறேன்.
- கடைநிலை ரசிகன்